2 மீனவர்களை சுட்டுக் கொன்ற விவகாரம்: இத்தாலி தூதருக்கு மத்திய அரசு சம்மன்
டெல்லி: நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த விவகாரம் தொடர்பாக இத்தாலி தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இத்தாலி தூதரிடம் இந்திய அரசு தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் எனத் தெரிகிறது.
சம்பவம் என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கொல்லம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி அவ்வழியாக சென்ற இத்தாலிய சரக்குக் கப்பலில் சென்றோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
"கடற்கொள்ளயர்கள் என நினைத்து துப்பாக்கியால் சுட்டதாக" இத்தாலிய கப்பல் மாலுமிகள் விசாரணையின் போது தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து இத்தாலிய தூதரை நேரில் வருமாறு வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கண்டனத்தை வெளியுறவுத் துறை தெரிவிக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications