நூல் விலை உயர்வுக்கு தயாநிதி மாறனே காரணம்: அமைச்சர் சுந்தர்ராஜ் குற்றச்சாட்டு
ஈரோடு: நூல் விலை உயர்வுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனே காரணம் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான சீருடைகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை மூடப்பட்ட போது துணிகள் ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிராசசிங் செய்யப்பட்டது. இதனால் வீண் போக்குவரத்து செலவுக்கு பிறகு பள்ளிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.
இந்த ஆலையில் சாயநீர் ஜீரோ சதவீதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அதே நீர் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றது. தினமும் 50,000 மீட்டர் துணி உற்பத்தியாகிறது. மத்திய ஜவுளித் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது நமது பருத்தியை கொள்முதல் செய்யவில்லை.
உள்நாட்டு தயாரிப்பு நூல்களை பயன்படுத்தாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது. இதனால் தான் நூல் விலை கடுமையாக உயர்ந்தது. இது தேசிய அளவிலான பிரச்சனை என்பதால் இது குறித்து தமிழக முதல்வரிடம் பேசி நூல் விலையைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications