For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரத்துக்கு மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மத்திய அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கூறி மேற்குவங்க மாநிலத்தில் ப.சிதம்பரத்துக்கு பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவின் மண்டல மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பாடு என்ற இடத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியிஅன்ர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

2ஜி ஊழலில் சிக்கியுள்ள ப.சிதம்பரம் அமைச்சர் பதவி வகிப்பதற்கு உரிய தகுதியை இழந்து விட்டார் என்று அவர்கள் முழக்கமிட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரையும், காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

English summary
BJP workers today staged a blackflag demonstration as the convoy of Union Home Minister P Chidambaram was returning from Badu in North 24 Parganas district after inaugurating a regional hub of the National Security Guard (NSG).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X