தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்குப்பதிவு
கொச்சி: தமிழக மீனவர்களை கடற் கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகள் மீது கொச்சி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஆலப்புழை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை கடற் கொள்ளையர்கள் என்று நினைத்து இத்தாலிய கப்பல் மாலுமிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று நினைத்ததால் தான் அவர்களை சுட்டுக் கொன்றதாக மாலுமிகள் தெரிவித்தனர்.இதையடுத்து கப்பல் மாலுமிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றிய பிறகே கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாலுமிகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது மிகவும் மோசமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
இரு நாட்டு உறவும் பாதிக்கப்படாத வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மீனவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications