விபத்தில் சிக்கித் தவித்த திமுகவினருக்குக் கை கொடுத்த வைகோ!

வைகோவின் இந்த மனிதாபிமானச் செயல் திமுகவினரை நெகிழ வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் அர்ஜூனன்(45). இன்று காலை அவர் மணிகண்டன்(30) என்ற திமுக பிரமுகருடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு கடலூர்-சிதம்பரம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் பெரியப்பட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்ததும் வைகோ காரை நிறுத்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடனடியாக பின்னால் வந்த கட்சி நிர்வாகி காரில் அவர்களை ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த கார் புறப்பட்ட பின்னரே வைகோ தனது காரில் பயணத்தை தொடர்ந்தார்.
அத்தோடு, அரியாங்குப்பம் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வைகோ, தனது செல்போன் மூலம் காயமடைந்த திமுகவினரின் நிலை குறித்து அவர்களைத் தொடர்பு கேட்டார். அவர்கள் வைகோவின் உதவி குறித்து மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications