திமுக சார்பில் போட்டியிடும் அருணாச்சலம் அண்ணன் மகனுக்கு காங். ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பில் சங்கரன்கோவில் தனி தொகுதியில் போட்டியிடும் ஜவகர் சூரியக்குமாரை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கட்சித் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜவகர் சூரியக்குமார் போட்டியிடுகிறார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்.பி. அருணாச்சலத்தின் அண்ணன் மகன் ஆவார். இந்த நிலையில் சூரியக்குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த ஆதரவை வலியக்க வந்து தந்துள்ளது காங்கிரஸ் என்பது நினைவிருக்கலாம். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவை மிரட்டி பணிய வைத்து பெருமளவில் சீட் வைத்து மகா தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ்.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றி விட்டது திமுக. இத்தேர்தலில் கேவலமான தோல்வியைச் சந்தி்ததது காங்கிரஸ்.

இந்த நிலையில் திமுக ஆதரவு கேட்காத நிலையில் தானாகவே முன்வந்து ஆதரவளிப்பதாக ஞானதேசிகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்து காங்கிரஸுக்குள் விரைவில் மோதல் வெடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+