திமுக உள்கட்சி மோதல்-தங்கள் பங்குக்கு உள்குத்து குத்திய மாறன் சகோதரர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க.வில் நடக்கும் யுத்தத்தில் தங்கள் பங்குக்கும் ஒரு உள்குத்து போட்டிருக்கின்றனர் சன் குழுமத்தின் மாறன் பிரதர்ஸ். அழகிரியை காட்டமாக கடுப்பேற்றிய நேரு இல்ல திருமணத்தை வைத்துத்தான் இந்த சீரியலை காட்டியுள்ளனர்.

தி.மு.க. பிரமுகர்களின் இல்ல திருமணங்கள் சென்னையிலும் சரி வெளியூர்களிலும் சரி.. சென்னை என்றால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளியூர் என்றால் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று.

இத்தகைய திருமண நிகழ்ச்சிகளில் கருணாநிதி எத்தனையோ சர்ச்சைக்குரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பகிரங்கமாகவோ மறைமுகமாகவோ சொல்வது உண்டு.

கருணாநிதி என்ன சொன்னாலும் சரி, திருமண வீட்டு நிகழ்ச்சியில் பேசியது என்பதாலேயே சன் குழுமத்தின் சன் டிவி செய்தியிலோ அல்லது சன் நியூஸ் சேனலிலோ ஒளிபரப்ப மாட்டார்கள்.

ஏனென்றால் எந்த ஒரு அரசியல் திருமண நிகழ்ச்சிக்கும் சன் குழுமத்தினர் செய்தியாளர்களையோ கேமராமேன்களையோ அனுப்பமாட்டார்கள். வெளியூர் செய்தியாளர்கள் அப்படி அனுப்பினாலும் பதிவு செய்யமாட்டார்கள்.

ஆனால் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது நேரு இல்லத் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதை மட்டுமல்ல.. ஸ்டாலின் பேசியதையும் ஒரு செய்தியாக்கி ஒளிபரப்பியது.

திருமண நிகழ்ச்சி செய்திகளையே ஒளிபரப்பாக சன் குழுமம், உள்குத்து உச்சகட்டத்தில் இருக்கும்போது, அழகிரியை அப்செட் ஆக்கும் வகையில் நேரு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த திருமண நிகழ்வை செய்தியாக்கி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் முனைப்பை இப்படி வெளிப்படுத்தி தங்கள் பங்குக்கு ஒரு உள்குத்து அடித்திருக்கின்றனர் என்றே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+