சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 400 துணை ராணுவப் படையினர்
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 400 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மார்ச்18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. மேலும் பாதுகாப்புப் படையினரும் தங்களது பணிகளில் இறங்கி விட்டனர்.
வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடப்பதைத் தடுக்கும் வகையில் வாகன சோதனை, ஹோட்டல்கள், விடுதிகளில் சோதனை உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் இன்று சங்கரன்கோவில் வருகிறார். சங்கரன்கோவில் தொகுதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வருவதால், இரு மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்களுடன், அவர் ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் பாதுகாப்பில் மத்திய பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம் 5 கம்பெனி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 80 படையினர் இருப்பார்கள்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலிலும் இதே அளவிலான துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அதே அளவில் சங்கரன்கோவிலிலும் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications