பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவர்கள் பெயர் பட்டியலை 29ம் தேதிக்குள் தர வேண்டும்: பிரவீன்குமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் (1951) பிரிவு 77ல் கூறியுள்ளபடி, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக விமானம் அல்லது வேறு எந்த வகையான போக்குவரத்து வாகனத்தில் பயணம் செய்தால் அந்தச் செலவு, வேட்பாளரின் செலவுக் கணக்காக கருதப்பட மாட்டாது. எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தால் அதிகபட்சம் 40 தலைவர்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக இருந்தால் அதிகபட்சம் 20 தலைவர்களும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர்களை தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் தர வேண்டும். அதன்படி சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி அறிவிக்கை நாளை (22.2.2012) வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள் (29.2.2012) பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கப்படும் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும்போது ஆகும் பயண செலவு தவிர, பிரசாரத்திற்கான இதர செலவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications