அதிமுகவில் இருந்து நடராஜனின் ஆதரவாளர்கள் 2 பேர் நீக்கம்: ஜெயலிலதா அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனின் ஆதரவாளர்கள் இருவரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருச்சி மாவட்டம் உறையூர் 57வது வட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்விழி, ஜெகநாதன் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதோடு, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட மலர்விழி மற்றும் ஜெகநாதன் ஆகியோர் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்தபோது அவருடன் இருந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+