For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24ம் தேதி மதுரை விழா துவக்கம்: தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது

Google Oneindia Tamil News

மதுரை: தென்மாவட்ட சுற்றுலாவை மேம்படுத்தம் வகையில் மதுரை விழா தமுக்கம் மைதானத்தில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து விழா குழுத் தலைவர் டாக்டர் உமா கண்ணன், மதுரை மண்டல சி.ஐ.ஐ. தலைவர் ஷியாம்பிரகாஷ் குப்தா, சுற்றுலா குழு அமைப்பாளர் வாசுதேவன் ஆகியோர் கூறியதாவது,

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக இல்லை. மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மேம்பட வாய்ப்பு உள்ளது. சுற்றுலாத் துறை வளரும்போது இங்குள்ள பாரம்பரிய கலைகளின் கலைஞர்கள், தொழில் வல்லுனர்கள் ஆகியோரின் நிலை மேம்பட வாய்ப்புள்ளது.

2,200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மதுரையின் கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலாச்சார வீதி ஒன்றை உருவாக்கி அங்கு ஒரே நேரத்தில் அனைத்து கலாச்சார நடனங்களும் நடக்கும். மேலும் பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கும் போட்டியும் நடக்கிறது. பழமையான மதுரையை அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதை போட்டோக்கள் மூலம் விளக்க உள்ளோம் என்றனர்.

மதுரை விழா இரண்டாவது வருமடாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai Vizha will be held at Tamukkam ground from february 24 till 26 to enhance the tourism in the southern districts of TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X