உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின் வீடு திரும்பினார்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை 6 மணி அளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர் சற்று நேரத்திற்கு முன்பு ஸ்டாலின் வீடு திரும்பினார். முன்னதாக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும், ஏராளமான திமுகவினர் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்து விட்டனர்.

அண்மையில் தான் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+