சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

Muthuselvi
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக வேட்பாளர் முத்து செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

சங்கரன்கோவில் தொகுதிக்கு வரும் மார்ச மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக வேட்பாளரகா சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் முத்து செல்வி அறிவிக்கப்பட்டார். இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று அவர் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை நகராட்சி கமிஷனர் செந்தில்முருகனிடம் வழங்கினார். அதில், சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்தும் வரை துணை தலைவர் கண்ணன் தலைவர் பொறுப்பை வகிப்பார். அதற்கான கடிதத்தை கமிஷனர் செந்தில்முருகன் கண்ணனிடம் வழங்கினார்.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளராக தங்கவேலு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்காக சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபர் முத்து செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+