முதல்வர் பதவி கேட்டு கட்காரியுடன் மல்லுக்கட்டும் எடியூரப்பா

தம்மை கர்நாடக முதல்வராக மீண்டும் நியமிப்பது குறித்து பிப்ரவரி 27-ந் தேதிக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு எடியூரப்பா கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிக்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ள நிதின் கட்காரியை தமது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று சந்தித்த அவர், தமது அரசியல் எதிர்காலம் குறித்து கட்சி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எந்த குற்றமுமே செய்யாமல் தாம் சிறையில் இருக்க நேரிட்டதையும் கட்காரியும் எடியூரப்பா இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவோ அல்லது மாநில முதல்வராகவோ தம்மை நியமிக்க வேண்டும் என்பது எடியூரப்பாவின் கோரிக்கை.
சட்டவிரோதமாக சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்த சர்ச்சையில் 6 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. புதிய முதல்வராக சதானந்தா கவுடா நியமிக்கப்பட்டார்.
தற்போதைய புதிய சிக்கல் குறித்து கருத்து தெரிவித்த சதானந்தா கவுடா, தமது முதலமைச்சர் பதவிக்கு எந்த ஒரு ஆபத்தும் எவராலும் இல்லை என்றார்.
புதிய கட்சியா?
கட்சி மேலிடம் தமது கோரிக்கையை ஏற்கமறுத்தால் பாஜகவை மிரட்டும் வகையில் புதிய கட்சியை எடியூரப்பா தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்காகவே திட்டமிட்டு இந்த காலக்கெடுவை எடியூரப்பா விடுத்துள்ளதாக கர்நாடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications