பெயருக்கு முன் எதிர்க்கட்சி தலைவர், பெயருக்குப் பின் எம்எல்ஏ வேண்டாம் - விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

சட்டமன்றத்தில் அதிமுகவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது நாக்கை மடக்கி, கைகளை உயர்த்தி, ஒருமையில் பேசினார் விஜயகாந்த். இது மரபை மீறிய செயல் என்று கூறி விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜெயகுமார்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் விஜயகாந்த்.
இந்த நிலையில், சஸ்பெண்டை எதிர்த்து தான் தொடர்ந்துள்ள வழக்கு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தனது பெயருக்கு முன்னால் எதிர்க்கட்சி தலைவர் என்ற அடைமொழியும், பெயருக்கு பின்னால் எம்.எல்.ஏ என்ற பதவியும் போட வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications