இடைத் தேர்தலுக்காக தார் ரோடு போடுகிறார்கள்-தேர்தல் ஆணையத்திடம் மதிமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட சேர்ந்தமரம் பகுதியில் அசுர வேகத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மதிமுக தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்துள்ளது.

சங்கரன்கோவில் தொகுதி கடையாலுருட்டியிலிருந்து சேர்ந்தமரம் வரையிலும், சேர்ந்தமரத்திலிருந்து சில பகுதிகளிலும், வீரசிகாமணியிலிருந்து குலசேகரமங்கலம் வரையிலும் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுபற்றி மாவட்ட மதிமுக இலக்கிய அணி செயலாளர் நடுவை முருகன் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரவு, பகலாக தார்சாலை சங்கரன்கோவில் தொகுதியில் பல இடங்களில் அரங்கேற்றி வருகிறது. அவசரகோலத்தில் போடப்படும் இந்த சாலைகள் தரம் குறைந்து போடப்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+