தூத்துகக்குடி அருகே பிரபல கோவிலில் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications