கோவா சட்டமன்ற தேர்தல் காங். மேற்பார்வையாளராக ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
பனாஜி: கோவா மாநில சட்டமன்ற தேர்தல் மேற்பார்வையாளராக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை நியமித்துள்ளது.
இதையடுத்து ஜி.கே.வாசன் கோவா சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவா சட்டமன்ற தேர்தல் மேற்பார்வையாளராக பணியாற்றவுள்ளார் வாசன்.
இத் தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
கூடவே ஈவிகேஎஸ் இளங்கோவனையும் அனுப்பி வைத்தால், கோவாவில் காங்கிரஸ் நிச்சயமாக 'ஜெயித்துவிடலாம்'!












Click it and Unblock the Notifications