நதிகள் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே": கமிட்டி அமைக்கவும் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Supreme Court
டெல்லி: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நீர்ப்பாசனம், குடிநீர் பிரச்சினைகள் உள்ளன. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைத்து விட்டால் நீர்ப்பாசன பிரச்சினைக்கும், குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கும் பெரிய அளவில் தீர்வு கண்டு விட முடியும். நாட்டில் வறட்சியால் தவிக்கிற மாநிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும். எனவே நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாட்டில் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட குழு இன்று உத்தரவிட்டது.

குழு மூலம் செயல்படுத்த வேண்டும்

நதிகள் இணைப்பு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

நதிகள் இணைப்புத் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் மத்திய நீர் ஆதாரத் துறை அமைச்சர், அத்துறையின் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், மத்திய நிதி ஆதாரத்துறை, நிதித்துறை, திட்டக்குழு, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளின் சார்பில் தலா ஒருவர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் இரண்டு சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக நதிநீர் இணைப்புக்கு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து இந்த குழு உருவாக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 2 முறை இக்குழு சந்திக்க வேண்டும். இதன் பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும்

ஏற்கனவே இந்த திட்டம் தாமதமாகி விட்டதால் திட்ட செலவு அதிகரித்துள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

2002-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது. நதிநீர் இணைப்புக்கு ரூ1 கோடி நிதி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூட அறிவித்திருந்தார். ஆனால் நதிகள் இணைப்புக்கு காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் தேவையில்லாத திட்டம் என்று 'அறிவுப்பூர்வமாக' அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ராகுல் சொல்லே வேதம் என்று கருதிய மத்திய அரசு இத்திட்டத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+