சங்கரன்கோவிலில் அழகிரி தலைமையில் நாளை திமுக செயல்வீரர்கள் கூட்டம்
சங்கரன்கோவில்: திமுக செயல்வீரர்கள் கூட்டம் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் நாளை சங்கரன்கோவிலில் நடக்கிறது. இதில் பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி்முக கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடக்கிறது. அதிமுக, திமுக, மதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக, மதிமுக கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்து முடிந்து அவர்கள் தேர்தல் பணிகளி்ல் தீவிரமடைந்துள்ளனர். தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
இந்நிலையில் தி்முக தலைமையிலான ஐனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை காலை 10 மணி்க்கு சங்கரன்கோவி்ல் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள வைஷ்ணவி மகாலில் நடக்கிறது. கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் முக அழகிரி தலைமை வகிக்கிறார். தங்கவேலு எம்.பி., கே.எஸ். ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்கிறார்.
தி்முக பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, அமைப்பு செயலாளர் இளங்கோவன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications