கோவை மாநகராட்சியின் புதிய துணை மேயர் லீலாவதி உண்ணி

Subscribe to Oneindia Tamil

Leelavathi Unni
கோவை: கோயம்பத்தூர் மாநகராட்சியின் புதிய துணை மேயராக அதிமுகவின் லீலாவதி உண்ணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவை மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வந்தவர் சின்னத்துரை. இவர் சசிகலாவின் உறவினர் ராவணனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது பதவியிலிருந்து விலகுமாறு இவரை அதிமுக மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பதவி விலகினார் சின்னத்துரை.

இதையடுத்து புதிய துணை மேயர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 73வது வார்டு அதிமுக உறுப்பினரான லீலாவதி உண்ணி போட்டியின்றி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

53 வயதான லீலாவதி, பியூசி வரை படித்தவர். தமிழ், மலையாளம் மொழிகள் பேசத் தெரியும். முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவரது இமெயில் முகவரி - [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+