கொல்லம் நீதிமன்றத்தில் கொலவெறி இத்தாலியர்களின் ஆயுதங்கள் ஒப்படைப்பு
கொல்லம்: தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இத்தாலியர்களின் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொச்சி காவல்துறை அதிகாரிகள் அஜித்குமார் தலைமையிலான குழு இத்தாலி கப்பலில் சோதனை நடத்தியது. கப்பலில் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இவற்றை கொல்லம் காவல்துறை அதிகாரிகள் தேபேஷ்குமார், சாம் கிறிஸ்டல் டேனியல் ஆகியோர் இவற்றை கொல்லம் நீதிமன்ற நீதிபதி அனிஷ்குமார் முன்பு ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மீனவர்கள் படுகொலை
கொல்லம் கடற்கரை பகுதியில் கடந்த 15-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அஜிஸ்பிங்கோ, வாலண்டைன் செலஸ்டின் ஆகியோரை இத்தாலிய கப்பல் பாதுகாப்பு படை வீரர்கள் சல்வோடோர் கிரோன், லதோரே மிசிமினியோனோ ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்தனர்,
இத்தாலியின் நெருக்கடியை மீறியும் கொலைகார இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே பிடித்து வைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பலை நாளை மாலை வரை கொச்சி கடற்பரப்பில் நிறுத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.












Click it and Unblock the Notifications