வாக்காளர் பட்டியலில் கெஜ்ரிவால் பெயர் இல்லை
Subscribe to Oneindia Tamil
இந்திரபுரம்(உ.பி): ஜனநாயகம் பற்றி பேசும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் "ஜனநாயகக் கடமை" ஆற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்திரபுரம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்ற கெஜ்ரிவால் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
ஜனநாயகம் பற்றி ஊரெல்லாம் முழங்கிய கெஜ்ரிவாலின் பெயர் வாக்காளர் பட்டியலில் மிஸ்ஸிங்தான் காரணம்.
இதனால் வாக்களிக்க முடியாத சூழலில் கெஜ்ரிவால் மற்றொரு ஜனநாயகக் கடமையாக கோவா தேர்தல் பிரச்சாரத்துக்கு விமானம் பிடித்து பறந்துவிட்டார்.
இது பற்றி கெஜ்ரிவால் கூறியதாவது:
என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது.
என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலிலும் இதுவரை இருந்து வந்தது என்றார்.












Click it and Unblock the Notifications