முதல்வரின் 64வது பிறந்தநாள்: விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல்வர் பரிசு வழங்குகின்றார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கபடி, கோகோ, துரோபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்குகிறார். பகல் 1 மணிக்கு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அளிக்கின்றார்.












Click it and Unblock the Notifications