ஒசாமா பதுங்கியிருந்த இடம் பாக் ராணுவம்-ஐஎஸ்ஐக்கு தெரியும்: அமெரிக்கா தனியார் உளவு அமைப்பு

இது தொடர்பாக ஸ்டார்பார் அதிகாரிகளுக்கு இடையே நடந்த இ-மெயில் தகவல் பரி்மாற்றங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து அந்த அமைப்பை முடக்க பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளது அமெிரிக்க அரசு.
இந் நிலையில், அமெரிக்க அரசுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய இமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ்,
சிஐஏவின் நிழல் என்று வர்ணிக்கப்படும் ஸ்டார்போரின் பல்வேறு ஊழியர்களும் அமெரிக்க ராணுவத்திலும் உளவுப் பிரிவுகளும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் ஒசாமா பின் லேடனை அமெரிக்க சீல் படைகள் கொன்ற பிறகு, இது குறித்து ஸ்டார்போரின் துணை இயக்குனர் பிரட் பர்ட்டன் தனது தெற்காசிய மண்டல இயக்குனருக்கு பிளாக்பெர்ரி மூலம் அனுப்பிய இமெயிலில், ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் ஐஎஸ்ஐக்கும் நன்றாகவே தெரியும். இதை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முக்கிய சோர்ஸ் என்னிடம் தெரிவித்தது. மொத்தத்தில் ஐஎஸ்ஐ மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே ஒசாமா இருக்குமிடம் தெரியும். இது அமெரிக்க உளவுப் பிரிவினருக்கும் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
தங்களது ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது வருத்தத்துக்குரியது என்று ஸ்ட்ராட்போர் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications