சோனியாவின் அமெரிக்கா பயணம் ஏன்?: உடைக்கிறார் சாமி
டெல்லி: சோனியா காந்தி அமெரிக்காவுக்கு அடிக்கடி சிகிச்சை பெறுவதற்காக செல்வது ஏன்? என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தமது டிவிட்டரில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு எந்த மாதிரி புற்றுநோய் ஏற்பட்டிருந்ததோ அதேபோலத்தான் சோனியாகாந்திக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 27-ந் தேதியன்று வெளியிட்ட டிவிட்டரில், சோனியாவை "விஷ்கன்யா" என்று குறிப்பிட்டு "விஷ்கன்யா விரைவில் அமெரிக்கா பயணம் செல்ல உள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ்க்கான சிகிச்சை போலவே மேற்கொள்ள உள்ளார் என்றும் டிவிட்டரில் சாமி சொல்லியிருந்தார்.
இதனிடையே நேற்று காலையில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே "சோனியாவின் அமெரிக்க பயணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரப்போகிறது" என்று இன்னொரு அதிரடியையும் சாமி டிவிட்டரில் வெளியிட்டுவிட்டார். அவருக்கு மட்டும் எப்படி சோனியாவின் பயணம் குறித்துத் தெரிந்தது என்பது தெரியவில்லை.
சாமியின் சித்து விளையாட்டுகள் சமூக வலைதளங்களையும் விட்டு வைக்கவில்லை!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications