மு.க.ஸ்டாலின் 60வது பிறந்த நாள்-திமுகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 60வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கட்சிக் கொடிகளை ஏற்றியும், இனிப்புகள், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 60 வயது பிறந்தது. தனது பிறந்த நாளை மக்ளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அதன்படி இன்று இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ரத்த தானம், மருத்துவ முகாம் என பலவற்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று காலை கோபாலபுரம் சென்ற ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி வாங்கினார். பின்னர் குடும்பத்தாரின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டார்.
பிறகு ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்த ஸ்டாலின் அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் இருந்தவாறு திமுகவினர், முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
மன்மோகன் சிங் வாழ்த்து
ஸ்டாலினுக்கு பல்துறைப் பிரமுகர்களும் பிறந்த நாள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் வாழ்த்தியுள்ளார். அவர் இதுதொடர்பாக வாழ்த்துச் செய்தியில்,
உங்களுடைய 60-வது பிறந்தநாளையொட்டி, எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து, நம் நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற ஆசி வழங்கட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications