முட்புதரில் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தை நாய்கள் கடித்துக் குதறி பலி
கோவை: முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்டாத பெண் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் அது பரிதாபமாக இறந்தது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் அப்பாஜி கார்டன் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் யாரோ பிறந்து சில மணி நேரமேயான தொப்புள் கொடி கூட அறுக்கபடாத பெண் குழந்தையை போட்டுச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த தெரு நாய்கள் குழந்தையை கடித்துக் குதறின. அப்போது ஏராளமான நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் முட்புதருக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் நாய்களை விரட்டியடித்துவிட்டு குற்றுயிரும், குலை உயிருமாய் கிடந்த குழந்தையை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அந்த பகுதியைச் சேர்ந்த யாராவது தான் குழந்தையை முட்புதரில் வீசியிருக்க வேண்டும் என்றும், அது தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கர்ப்பிணிகளில் யாராவது குழந்தை பெற்றுள்ளார்களா என்று மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications