சங்கரன்கோவிலில் அதிமுக அமைச்சர்கள் முகாம்- பொதுமக்கள் கடும் அதிருப்தி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக அமைச்சர்க்ள் 33 பேர் உட்பட 43 பேர் முகாமிட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிகிறது.
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் முத்துசெல்வி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க 33 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர்கொண்ட தேர்தல் பணிக் குழுவை அதிமுக அறிவித்திருந்தது.
ஆனால் வேட்பு மனு தாக்கலின் போதே அனைத்து நிர்வாகிகளும், அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் திரண்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அதிமுக தேர்தல் பணிகுழு மாற்றியமைக்கப்பட்டதாக அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 9 அமைச்சர்கள் ஒரே கட்டமாக சங்கரன்கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டது மக்களின் முகத்தை மேலும் சுளிக்க
வைத்திருக்கிறது.
சங்கரன்கோவில் நகர பகுதியில் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், டாக்டர் விஜய் ஆகியோரும், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் அமைச்சர்கள் பச்சைமால், பன்னீர்செல்வம், நந்தம் விஸ்வநாதன், செந்தூர்பாண்டியன், கோகுல இந்திரா, வளர்மதி, சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலினா? அழகிரியா? என அக்கப்போர் நடத்தி வந்த திமுகவினர் சற்றே ஆறுதலான நிலையில் இருக்கின்றனர். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முறையாக பட்டியலிட்டு திமுக வெளியிட்டிருப்பதே இதற்குக் காரணம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications