திருநங்கைகளுக்காக பாலியல் சுதந்திர கட்சி தொடங்குகிறேன்.. இப்படிக்கு ரோஸ்!

இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமீபத்தில் திருநங்கைகளுக்கு சமூகம் எந்தவிதமான அங்கீகாரத்தையும் கொடுக்க மறுக்கிறது, கெளரவமான வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களை பாலியல் தொழிலில் சட்டப்பூர்வமாக ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரோஸ்.
இந்த நிலையில் திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக புதிய கட்சி தொடங்கப் போவதாக ரோஸ் கூறியுள்ளார். கும்பகோணம் வந்த அவர் அங்கு சிறுந்த முன்னுதாரண விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாலியல் சிறுபான்மையினருக்கு சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டு மற்றவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, போக பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். தொன்றுதொட்டு அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தநிலை மாறவேண்டும்.
அவர்களுக்கு பொருளாதாரரீதியில் முன்னேற்றம் இல்லாததே அவர்கள் சில செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. அதற்கு காரணம் இயற்கைதான்.
மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று அரசியலில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.
சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட ஒரு பெரிய மாநில கட்சியிடம் வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளேன். இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற பெயரில் இக்கட்சியை செயல்படுத்தவுள்ளேன் என்றார் ரோஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications