ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி விஜய் மக்கள் இயக்க தலைவர் பலி
பொள்ளாச்சி: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பிளெக்ஸ் போர்டு வைத்தபோது மின்சாரம் தாக்கி விஜய் மக்கள் இயக்க தலைவர் பலியானார், இன்னொருவர் படுகாயமடைந்தார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது 60வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி பொள்ளாச்சி-கோவை சாலைபி.எஸ்.என்.எல். அலுவலகத்தையொட்டி உள்ள காலி இடத்தில் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 30 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பிளெக்ஸ் போர்டு வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தனியார் பிளெக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த திலக் குமார் (21),அலெக்ஸ் பாண்டியன், அழகப்பா காலனியைச் சேர்ந்த ஆபித் ரகுமான், குமரன் நகர் முருகேசன், சுல்தான் ஆகியோர் 5 பேர் பிளக்ஸ் போர்டு வைக்க அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது திலக்குமார், அபித் ரகுமான் ஆகியோர் அந்த போர்டை வைக்க நடப்பட்டிருந்த மரக்கம்பின் உச்சிக்கு சென்று போர்டை நேராக வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பிளெக்ஸ் போர்டில் இருந்த இரும்புக் குழாய் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரின் மின் கம்பியில் பட்டது. இரும்புக் குழாயில் மின்சாரம் பாய்ந்ததில் திலக் குமாரும், ஆபித் ரகுமானும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திலக் குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த ஆபித் ரகுமான் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த திலக் குமார் நடிகர் விஜயின் மகக்ள் இயக்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு கூடினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications