தமிழகத்தில் முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைப்பு!

Subscribe to Oneindia Tamil

Stamp Duty
சென்னை: தமிழகத்தில் சொத்துக்களைப் பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் முத்திரைத் தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடு, மனை மற்றும் நிலங்களையும், சொத்துக்களையும் பதிவு செய்யும்போது அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி முத்திரைத்தாள் கட்டணம் 6 சதவீதமாக உள்ளது (இதர வரிகள், கட்டணம் சேர்த்து 9 சதவீதம்). இதை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் மற்றும் பில்டர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்று முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது 6 சதவீதமாக இருக்கும் முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவீதமாக குறைக்கப்படும்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 2 சதவீத சர்சார்ஜ் மற்றும் 1 சதவீத பதிவு கட்டணம் ஆகியவை தொடர்ந்து நீடிக்கும். ஒட்டுமொத்த சொத்துக்கான முத்திரைத்தாள் கட்டணம் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைகிறது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+