உபியில் சமாஜ்வாடிக்கு முதலிடம்... காங்கிரஸுக்கு கடைசி இடம் - எக்ஸிட் போல் முடிவுகள்
லக்னோ: உபியில் இப்போது நடந்துள்ள சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைப் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே நடத்தியுள்ள இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 195 முதல் 210 வரை சீட்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
தற்போதைய முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 88 முதல் 98 இடங்கள் கிடைக்கும். இது அக்கட்சிக்கு இப்போதுள்ள இடங்களை விட 100 சீட்கள் குறைவு.
பாஜகவுக்கு 50 முதல் 56 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு நான்காவது இடம்தான்
ராகுல் காந்தியே தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடம்தான் கிடைத்துள்ளது. அக்கட்சி 38 முதல் 42 தொகுதிகளை வென்றாலே பெரிய விஷயம் என இந்தத் தேர்தல் முடிவு கூறுகிறது. இத்தனைக்கும் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தள் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகள் காங்கிரஸ் வட்டாரத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications