கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க வரும் பிரசார வீடியோ படம் 'திருவாளர் முத்து'!

கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேசிய அணு சக்தி கழகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திருவாளர் முத்து விளக்கப் படம் வெளியாகியுள்ளது.
இது ஒரு கார்ட்டூன் படமாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சாதகங்கள் குறித்து இந்த கார்ட்டூன் முத்து எளிய கிராமப்புற பேச்சின் மூலம் விளக்குகிறார்.
இதுகுறித்து தேசிய அணு சக்தி கழக செயல் இயக்குநர் நாகையா கூறுகையில், மக்கள் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே அணு மின் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மக்களின் கனவுகளையும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாங்கள் முன்னுரிமை தருகிறோம்.
அணு மின் சக்தி உற்பத்தி தொடர்பான மக்களின் சந்தேங்களுக்கு விளக்கம் தர வேண்டியது எங்களது கடமை. அவர்களின் அச்சத்தையும், சந்தேகங்களையும் நாங்கள் நிராகரிக்கவில்லை,மதிக்கிறோம். அவற்றுக்குரிய விளக்கங்களைத் தர எப்போதுமே நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் இந்த விளக்கப் படம்.
முத்து என்ற பெயரில் தமிழகத்தில் வெளியான திரைப்படத்தைத் தழுவியே இந்தப் பெயரை நாங்கள் சூட்டினோம். மேலும் தமிழக கிராமங்களில் முத்து என்ற பெயர் மிகவும் பிரபலமானது என்பதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தோம் என்றார்.
இந்த விளக்கப் படம் தமிழ் தவிர கன்னடம், இந்தி, தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியில் இப்படத்திற்கு மிஸ்டர் புதியா என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுதவிர ரேடியோ, டிவி விளம்பரங்கள் மூலமாகவும் அணு சக்தியின் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப் போகிறதாம் தேசிய அணு சக்தி கழகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications