ராகுல்காந்தியின் தேர்தல் செலவை வெளிப்படுத்த வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் தேர்தல் செலவு விவரங்களை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே குழு வலியுறுத்தியிருந்தது.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸின் தடாலடி முகமான திக்விஜய்சிங், உங்களுக்கு எல்லாம் கணக்கு காட்டனும்னு அவசியம் கிடையாது.. தேர்தல் ஆணையத்துக்கிட்ட எல்லாத்தையும் கொடுப்போம் என்று கடுப்படித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ராகுல் காந்தியோட ஹெலிகாப்டர் செலவு போன்றவற்றை திக்விஜய்சிங் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டப் போராட்டம்
இதனிடையே ஊழலுக்கு எதிரான அடுத்த கட்டப்போராட்டம் குறித்து அன்னா ஹசாரே தமது குழுவினருடன் டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள தாம் திட்டமிட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்தில் இந்த பிரச்சாரத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications