3வது முறையாக ரஷ்ய அதிபராகிறார் புடின்-6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்!

ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் போட்டியிட்ட விளாடிமிர் புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஏற்கெனவே கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை ரஷ்ய அதிபராக இருந்துள்ளார். ரஷ்ய நாட்டின் சட்டப்படி ஒருவரே தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் அதிபராக இயலாது.
இதனால் கடந்த முறை தனது நம்பிக்கைக்குரிய டிமிடிரி மெத்வதேவை அதிபராக்கிவிட்டு, அதை விட அதிகாரம் குறைவான பிரதமர் பதவியில் புடின் அமர்ந்தார்.
இந் நிலையில் மீண்டும் இந்தாண்டு அதிபர் தேர்தல் புடின் போட்டியிட்டார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அவர் 64 சதவீத வாக்குகளை அள்ளி மாபெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 3வது முறையாக அதிபராகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
மூன்றாவது முறை பதவிக்கு வரும் அதிபர் 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்கலாம். இதனால் வரும் 2018ம் ஆண்டு வரை புடின் அதிபராக நீடிப்பார். அடுத்த தேர்தலிலும் வென்றால், அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதாவது, 2024ம் ஆண்டு வரை அவரே அதிபராக நீடிக்க முடியும்.
ஆனால், இந்தத் தேர்தலில் பெரும் முறைகேடுகள் மூலமே புடின் வென்றுள்ளதாக எதிர்க் கட்சிகளும் நடுநிலையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகளே பெற்றதாகவும், ஆனால் தேர்தல் கமிஷனும் மெத்வதேவ் அரசும் சேர்ந்து இதைத் திருத்தி 64 சதவீதமாக்கி புடின் வென்றதாக அறிவித்துவிட்டதாக புகார் கூறியுள்ளனர்.
புடினை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் ஜென்னடி சூகனேவ் 17 சதவீத வாக்குகளை பெற்றதாகவும் மற்ற 3 பேரும் சிங்கிள் டிஜிட்டைக் கூட தாண்டவில்லை என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications