சங்கரன்கோவில், கோவில்பட்டி பகுதியில் இறைச்சி விலை அதிகரிப்பு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு திரும்பினாலும் கரை வேட்டிகளின் நடமாட்டம், விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, சாதாரண பெட்டிக்கடை முதல் சாப்பாடு கடை வரை கூட்டம் அலைமோதுகிறது.
அதிமுக தரப்பில் 32 அமைச்சர்கள் உள்பட 42 பொறுப்பாளர்களுக்கு தலா 200 பேர் வீதம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினரும், அதே அளவில் திமுக முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் என அவர்களும் சு்மார் 10 ஆயிரம் பேர் என போட்டியிடும் கட்சிகளுக்கு தகுந்தவாறு தொண்டர்கள், விஜபிக்கள் என 25 முதல் 35 ஆயிரம் பேர் வரை சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் வெளி்மாவட்ட கட்சி பிரமுகர்கள் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தினமும் கடைகளில் தீனி வாங்கி கொடுப்பதற்கு கட்டு படி ஆகாததால் இப்போது ஆங்காங்கே தினமும் அசைவ உணவு சப்ளை நடந்து வருகிறது. இதற்காக தொண்டர்கள் கிராமத்தில் தங்கியிருக்கும் பகுதிலேயே வீடு எடுத்து தங்கி பிரச்சாரம் செய்வதால் அனல் கொப்பளிக்கும் வெயில் தாக்கத்தை போக்கும் பொருட்டு அசைவு உணவுடன் அரசு மதுபானத்திலிருந்து அலுப்பு மருந்து வரை சப்ளை தீவிரமாக நடந்து வருகிறது.
அசைவு உணவிலேயே மீன் மட்டும் காஸ்ட்லி என்பதால் சிக்கன், மாட்டுக்கறி, ஆட்டிறைச்சியோடு கமகமக்கும் உணவு விருந்து தினமும் 12 மணிக்கு வழங்கப்படுகிறது.
அரசியல் கட்சியனருக்கு தினமும் அசைவு விருந்து உபசரிப்பு நடப்பதால் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 500 ரூபாயாகவும், பீப் 1 கிலோ 200 ரூபாயாகவும், கோழி ரூ.140 ஆகவும், விலை உயர்ந்துள்ளது.
கோவில்பட்டி, சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் ஆடு விற்பனை, கோழி விற்பனை, மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.
வந்தவங்கள்லாம் சீக்கிரமே இடத்தைக் காலி செய்தால் லோக்கல் ஆட்களுக்கு மட்டன், சிக்கன் விலை குறையும் போல...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications