பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என பயந்து முஸ்லீம்கள் முலாயமுக்கு வாக்களித்துவிட்டனர்- மாயாவதி
லக்னெள: பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் பதவி விலகிச் செல்லும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியையடுத்து மாயாவதி இன்று ஆளுநர் பி.எல்.ஜோஷியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் ஆட்சிக்கு வரும்போது உத்தரப் பிரதேசம் மிக மோசமான நிலையில் இருந்தது. மாநிலத்தில் பல மாற்றங்களை முன்னேற்றங்களை கொண்டு வந்தேன். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர்.
இதனால் தான் நாங்கள் தோற்று, முலாயம் சிங் வென்றுவிட்டார். மேலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி அரசியல் செய்து காங்கிரசும் குழப்பம் செய்துவிட்டது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெல்வோம். ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மட்டமான நிர்வாகத்தால் மக்கள் நிச்சயம் வெறுப்படைவார்கள், எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications