கோவா, பஞ்சாப்பில் பாஜக கூட்டணி ஆட்சி: காங்.குக்கு மணிப்பூர்-உத்தரகாண்ட்டில் மட்டும் இழுபறி
டெல்லி: கோவாவில் பாஜக தனித்து ஆட்சியமைக்கிறது. பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம், பாஜக இணைந்து ஆட்சியமைக்கின்றன. மணிப்பூரை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உத்தரகாண்ட்டில் மட்டும் இழுபறி நீடிக்கிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் உ.பியில் சமாஜ்வாடி கட்சி வரலாறு காணாத் வெற்றியைப் பெற்றுள்ளது. தொங்கு சட்டசபை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆணித்தரமான வெற்றியை ஈட்டியுள்ளது சமாஜ்வாடி கட்சி. அக்கட்சி மொத்தம் 224 இடங்களை வென்று விட்டது.
ஆட்சியைப் பறி கொடுத்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு 80 இடங்களே கிடைத்தன. பாஜக மூன்றாவது இடத்தைப் பிடித்து 47 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
உத்தரகாண்ட்டில் இழுபறி
ஐந்து மாநிலங்களிலும் தெளிவான முடிவு ஏற்படாத ஒரே மாநிலம் உத்தரகாண்ட் மட்டுமே. இங்கு பெரும்பான்மை பலம் பெற 36 இடங்கள் தேவை. ஆனால் யாருக்குமே அந்தப் பலம் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் அதிகபட்சமாக 32 இடங்களை வென்றுள்ளது. அதேசமயம் பாஜகவுக்கு 31 இடங்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேச்சைகளுக்கு 4 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த 7 பேரின் ஆதரவு கிடைக்கும் கட்சியே ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த 7 பேரையும் வளைக்கும் வேலையில் காங்கிரஸும், பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.
மணிப்பூர் காங்கிரஸுக்கு
மணிப்பூர் மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டு விட்டது. அந்தக் கட்சிக்கு அங்கு 42 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறார் முதல்வர் இபோபிசிங். கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 12 இடங்களை காங்கிரஸ் வென்றுள்ளது.
கோவா பாஜகவுக்கு
கோவாவில் இதுவரை இருந்து வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
மொத்தம் உள்ள 40 இடங்களில் 24 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு வெறும் 9 இடங்களே கிடைத்தன. தேசியவாத காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் ஆட்சி
பஞ்சாபில் 68 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது சிரோமணி அகாலிதளம் தலைமையிலான கூட்டணி. இங்கு காங்கிரஸ் 2வது இடத்தையே கைப்பற்ற முடிந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications