லக்னோவின் ஐந்து தொகுதிகளில் நான்கைப் பிடித்து பாஜக கோட்டையைத் தகர்த்த சமாஜ்வாடி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி, தலைநகர் லக்னோவில் இதுவரை பாஜகவின் கோட்டையாத திகழ்ந்து வந்த தொகுதிகளையும் வளைத்துப் பிடித்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
லக்னோவில் உள்ள 5 இடங்களில் நான்கை சமாஜ்வாடி வென்றதன் மூலம் பாஜகவின் கோட்டை தகர்ந்துள்ளது.
1991க்குப் பிறகு லக்னோவில் உள்ள தொகுதிகளை பெரும்பாலும் பாஜகதான் வென்று வந்தது. அங்குள்ள ஐந்து தொகுதிகளில் குறைந்தது நான்கு தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக வெல்லும். ஆனால் தற்போது அதை மாற்றியமைத்து, நான்கு தொகுதிகளை சமாஜ்வாடி பிடித்து விட்டது. லக்னோ கிழக்கில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.
லக்னோவின் வடக்கு தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஐஐஎம் அகமதாபாத் பேராசிரியருமான அபிஷேக் மிஸ்ரா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக எம்பி லால்ஜி தாண்டனின் மகன் அசுதோஷ் டான்டன் கோபால்ஜி மகாமோசமான முறையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல லக்னோ மத்திய தொகுதியில்,சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் ரவிதாஸ் மெஹரோத்ரா வெற்றி பெற்றுள்ளார். லக்னோ மேற்கிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் முகம்மது ரேஹான் கைப்பற்றியுள்ளார்.
பாஜக கோட்டை தகர்ந்தது
லக்னோ நகரில் உள்ள நான்கு தொகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள மஹோனா தொகுதி ஆகியவற்றைச் சேர்த்து 5 தொகுதிகளில் இதுவரை பாஜக குறைந்தது 4 தொகுதிகளில் வென்று வந்தது. ஆனால் இந்தத் தேரத்லில் லக்னோ கிழக்கில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அங்கு மாநில பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ரா மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான தோல்வி
இது ஒருபுறம் இருக்க பாரதீய ஜனதா கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் நகர்புறங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 1991, 1996 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் நகர்புறங்களில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் நகர்புறப் பகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் மீதான எதிர்ப்பு அலையே சமாஜ்வாடி கட்சிக்கு நகர்ப்புறங்களில் வெற்றி வாய்ப்பினை பெற்றுத் தந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications