குமரியில் குடிமகன்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் போலீசார்
குமரி: குமரி மாவட்டத்தில் போலீசார் சிலர் குடிமகன்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி குடித்துபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் குடிமகன்களை மிரட்டி போலீசார் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுவாங்கி விட்டு வருபவர்களையும் போலீசார் பிடித்து நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
களியக்காவிளை அதங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று குழித்துறையில் உள்ள மதுக்கடையில் 8 மதுபாட்டில்கள் வாங்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர். அவர் மதுப்பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு தான் சென்றுள்ளார். ஆனாலும் போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications