ஒரு பெண் எம்.எல்.ஏவைக் கூட தேர்ந்தெடுக்காத கோவா-உ.பியில்தான் ஜாஸ்தி!
டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 55 பெண்கள் மட்டுமே சட்டசபைக்கு் தேர்வாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக உ.பியில் 33 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம், கோவா மாநிலத்தில் ஒரு பெண்ணைக் கூட அந்த மாநில மக்கள் தங்களது பிரதிநிதியாகத் தேர்வு செய்யவில்லை.
சமீபத்தில் உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பொதுத் தேர்தல் நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் வெறும் 55 இடங்களுக்கு மட்டுமே பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் வெறும் 8 சதவீதமே ஆகும்.
இதில் மோசமான நிலை என்னவென்றால் கோவாவில் ஒரு பெண்ணைக் கூட அந்த மாநில மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மணிப்பூரில் 3 பேரையும், உத்தரகாண்ட்டில் 5 பேரையும் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாபில் 14 பெண்களுக்கு எம்.எல்.ஏவாகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உபியில்தான் அதிகபட்ச அளவாக 33 பெண்கள் சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருவது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications