தேர்தல் விதிமீறல் வழக்கு: மொத்தம் 75, அதிமுக மீது மட்டும் 39
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 16ம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் மட்டுமின்றி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தல், கட்சி கொடிகளை கட்டுதல், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதி்முக, திமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அதிமுக மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 23 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக திங்கட்கிழமை வரை ரூ. 48.37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 21 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications