ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா.. 'மகம் நட்சத்திர பிறந்த நாள்' தரிசனம்!

ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதியாகும். ஆனால், அவருடைய மகம் நட்சத்திரப்படி நேற்று (புதன்கிழமை-மார்ச் 7) பிறந்த தினம் வந்தது.
இதையொட்டி ஜெயலலிதா நேற்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். கோவில் வாசலில் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சந்திரகுமார், கூடுதல் ஆணையர் தனபால், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் தலைமை அர்ச்சகர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்ததும் கார்த்திகை கோபுரம் வழியாக ஜெயலலிதா கோவிலுக்குள் சென்றார். முதலில் கருடாழ்வார் சன்னதியில் வணங்கிவிட்டு, கோவிலுக்கு ஏற்கனவே அவர் நன்கொடையாக வழங்கிய பேட்டரி காரில் ஏறி அமர்ந்து நேராக மூலவர் ரெங்கநாதர் சன்னதிக்கு சென்றார். மூலவர் சன்னதியில் தனது பெயர், நட்சத்திரத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அர்ச்சனை செய்தார்.
பின்னர் தாயார் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்றார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு இறுதியாக உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிக்கு சென்றார்.
மாலை 5.20 மணிக்கு கோவிலுக்குள் சென்ற ஜெயலலிதா சுமார் ஒன்றரை மணி நேரம் அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்து விட்டு 6.50 மணிக்கு வெளியே வந்தார்.
பின்னர் இரவு 7.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை கிளம்பிச் சென்றார்.
ஜெயலலிதாவுக்கு பெருமாள் வஸ்திரம்:
முன்னதாக ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும்போது அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள ஸ்ரீபலகாரி ஜீயர் மடம் அருகில் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு சாத்தப்பட்ட வஸ்திரத்துடன் அர்ச்சகர்கள் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்ததும் ஜெயலலிதாவின் கார் நிறுத்தப்பட்டது. காரில் இருந்தபடியே ஜெயலலிதா சீனிவாச பெருமாளுக்கு சாத்தப்பட்ட வஸ்திரத்தை பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியிலும், கோவிலிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஸ்ரீரங்கம் தான் ஜெயலலிதா கடந்த தேர்தலில் வென்ற சட்டமன்றத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications