யாழ்ப்பாணத்தில் 3 இலங்கை படையினர் "மர்மமாக" சுட்டுக்கொலை
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியில் முருகன் கோயில் பகுதியில் காவல் பணியில் இருந்த இலங்கை படையினர் 3 பேர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் கோயில் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் அப்பகுதிக்கு இலங்கை படையினர் சென்று பார்த்தனர். 3 படையினரும் சடலங்களாக கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் முழுவதுமாக இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் நிலையில் இலங்கை படையினரை குறிவைத்து யார் சுட்டுக்கொன்றது என்பது மர்மமாக இருந்து வருகிறது.
ஆனால் இது தொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்து போன மூவரில் ஒருவர் சக படையினரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் மூன்றாவது தரப்பு எதற்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்து சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications