சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய பொதுச் செயலாளருமான பாத்திமா முசாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் தொகுதி இதுவரை அதிமுகவின் கோட்டையாகவும், காலம் சென்ற முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த வீடாகவும் உள்ளது. இந்த தொகுதியில் பல கட்சிகள் போட்டி போட்டாலும் இறுதி வெற்றி அதிமுகவுக்கு தான்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டையும், விலைவாசி உயர்வையும் காரணம் காட்டியும், தங்கள் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளன. முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மின் தட்டுப்பாடு நீங்கிவிடும்.
முதல்வர் ஜெயலிலதா ஆட்சியில் அமர்ந்தவுடன் வக்பு வாரியத்திற்கும், ஹஜ் கமிட்டிக்கும் நிதி ஒதுக்கீடு செய்ததோடு தமிழக ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்த்தினார்.
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல நல்ல திட்டங்களை செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தப்போவதாக உறுதியளித்துள்ளார். மேலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களையும் மீட்டுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
எனவே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை மேலும் வலுவூட்டும் வகையில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications