சூரியனில் ஏற்பட்ட காந்த புயல்கள்: சேதமின்றி தப்பித்தது பூமி!

சூரியனில் அடிக்கடி காந்தப் புயல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சூரியனில் காந்த புயல் ஏற்பட்டது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து ராட்சத புயலாக மாறியது.
இப்புயல் பூமியை 40 லட்சம் கி.மீ. வேகத்தில் வந்து தாக்கலாம் என்றும், அதனால் பூமியில் உள்ள தகவல் தொடர்பு, விமான சேவை, செயற்கை கோள்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்று நாசா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.
இந்த நிலையி்ல் பூமியின் மேற்கு பகுதியை நேற்று காலை 5.45 மணிக்கு இப்புயல் கடந்து சென்றது. ஆனால் பூமியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எதிர்பார்க்கப்பட்டதை விட மிக குறைந்த அளவிலான 2 புயல்கள் ஏற்பட்டது. இதனால் பூமியில் புயல் லேசாக மட்டுமே உணரப்பட்டது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நேற்று வீசிய காந்தப் புயல் வினாடிக்கு 1,300 கி.மீ. வேகத்தில் பூமியை கடந்து சென்றுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட காந்தப் புயல்களில் நேற்று ஏற்பட்டதுதான் பெரியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து வி்ஞ்ஞானிகள் கூறுகையில், "நேற்று காந்த புலத்தின் திசை எதிர்புறமாக அமைந்ததால், புயலின் வேகம் குறைந்தது. இதனால் பெரிய அளவில் புயல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சூரியனின் காந்த புலத்தின் தன்மை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இருப்பினும் பூமியின் காந்த புலத்தின் மூலம் பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது என்றனர்.
முன்னதாக கடந்த 1972ம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் சூரிய காந்தப் புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல கடந்த 1989ல் ஏற்பட்ட சூரிய காந்த புயலால் கனடாவில் கியூ பெக் மாகாணத்தில் மின்சாரம் தடை ஏற்பட்டு, 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications