இல.கணேசனுக்கு இடையூறாகப் பிரசாரம் செய்த குஷ்பு மீது போலீஸார் வழக்கு!

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் இல.கணேசன். மனதில் பட்டதை நேர்மையாகப் பேசக் கூடியவர். தெள்ளத் தெளிவாக பேசக் கூடிய ஒரு முக்கியத் தலைவர். இவர், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் முருகனை ஆதரித்து சங்கரன்கோவில் நகர பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
சங்கரன்கோவில் தேரடி திடல், தெற்கு ரத வீதி சந்திப்பு பகுதியில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். முறைபப்டி அனுமதி வாங்கியே இந்தப் பிரசாரம் நடந்தது. ஆனால் அப்போது தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை குஷ்பு இல.கணேசன் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்து பேசத் தொடங்கினார்.
கணேசனா, குஷ்புவா என்று வந்தபோது குஷ்பு பக்கமே கூட்டம் சாய்ந்தது. இதனால் பாஜகவினரின் பிரசாரத்திற்கு ஊறு ஏற்பட்டது. இல.கணேசன், எந்தப் பிரச்சினையும் செய்யாமல், கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார். அதாவது தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். இது பாஜகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஆனால் நாகரீகம் பார்க்காமல், தொடர்ந்து தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார் குஷ்பு.
இத்தனைக்கும் அந்த இடத்தில் பிரசாரம் செய்ய குஷ்பு அனுமதியே வாங்கியிருக்கவில்லை. வேறு இடத்தில் பேச அனுமதி வாங்கி விட்டு இங்கு வந்து குழப்பம் ஏற்படுத்தி விட்டு போய் விட்டார்.
இதையடுத்து தற்போது அனுமதி வாங்காமல் பேசியதாக குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அரசியலில் இன்னும் பக்குவம், நாகரீகம் வர வேண்டும் குஷ்புவுக்கு என்று பாஜகவினர் குமுறி வருகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!











Click it and Unblock the Notifications