தனக்கு முதலில் மட்டன் பரிமாறச் சொன்ன மகனை சுட்டுக் கொன்ற மாஜி ராணுவ வீரர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் தனக்கு தான் முதலில் ஆட்டுக்கறி பரிமாற வேண்டும் என்று அடம்பிடித்த 20 வயது மகனை கோபத்தில் தந்தை சுட்டுக் கொன்று விட்டார். மகனைக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்ட அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாதிஹ் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண தாகூர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி லீலாவதி தேவி. அவர்கள் வீட்டில் ஆட்டுக் கறி சமைத்துள்ளனர். குடும்பத்தார் அனைவரும் கறியை ருசிக்க ஆவலாய் அமர்ந்திருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஆட்டுக்கறி தட்டுடன் அனைவருக்கும் பரிமாற வந்துள்ளார்.
அப்போது அவரது இளைய மகன் சத்ருகன் தாகூ ர்(20) அண்ணனை விட்டுவிட்டு தனக்கு தான் முதலில் கறி கொடுக்க வேண்டும் என்று கூறி அந்த தட்டைப் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மேலும் தடயங்களை அழிக்க இறந்த மகனின் உடலை அவசர அவசரமாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்தார்.
ஆனால் இது குறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி லீலாவதி தேவி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த சத்ருகனின் உடலை கைப்பற்றினர். இதற்கிடையே ராதாகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். அவர் தனது மகனை சுட்டுக் கொன்றபோது குடிபோதையில் இருந்தாராம்.
சாதாரண கறிக்காக, பெற்ற மகனை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications