இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் இதுவரை ரூ.63 லட்சம் பறிமுதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.63 லட்சம் ரொக்கமும், ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் பறி்முதல் செய்யப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு தாசில்தார் கோமதிசங்கர நாராயணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில் இருந்து சங்கரன்கோவில் எழில்நகரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஞானசம்பந்தன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 255 ரொக்கம் பறி்முதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அதிகாலை நடுவப்பட்டி சோதனைச்சாவடியில் விளாத்திகுளம் துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக காரில் வந்த நாகப்பட்டினம் மாவட்டம் விடிமங்களத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மோகன் காந்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.34,000 பறி்முதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவி்ல் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.62 லட்சத்து 83 ஆயிரத்து 205 ரொக்கமும், 7 லட்சத்து 62 ஆயிரத்து 659 மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications